

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் சிம்ரன், த்ரிஷா இணைந்து நடித்தனர். அவர்களை வைத்து சுமந்த் ராதாகிருஷ்ணன் படம் இயக்குகிறார். இவர், ‘சதுரம்-2’ என்ற படத்தை இயக்கியவர். சிம்ரன், த்ரிஷா இருவரும் இப்படத்தில் அக்கா - தங்கையாக நடிக்கின்றனர். படத்தின் கதாபாத்திரங்கள் போல, லொக்கேஷனுக்கும் முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் இப்படம் கேரளா, சென்னை, தாய்லாந்து என பல இடங்களில் படமாகிறது. இப்படத்துக்கு ‘சுகர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.