ராக்கெட் விஞ்ஞானி

ராக்கெட் விஞ்ஞானி
Updated on
1 min read

கலைஞர் டிவியில் ‘இங்க என்ன சொல்லுது’ என்ற விளையாட்டு நிகழ்ச்சி நாளைமுதல் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது. பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட உள் அரங்கில், ஜெகன் தனது இயல்பான பாணியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதுபற்றி கேட்டதற்கு ஜெகன் கூறியதாவது:

‘‘நம்ம மனசு என்ன சொல்லுது? அதுதான் இந்த நிகழ்ச்சியின் மையம். முழுக்க முழுக்க ஊகங்களை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மட்டுமின்றி சாமான்யர்களும் பங்கேற்பார்கள். அணி அணிகளாக பிரிந்து விளையாடுவார்கள். ஒரு அணியினரின் உறவினர்களை மற்றொரு அணியினர் கண்டுபிடிப்பது, வயதை கண்டுபிடிப்பது என்று ஊகித்து சொல்லக்கூடிய கலகலப்பும், விறுவிறுப்பும் கலந்த விளையாட்டு நிகழ்ச்சி இது. இவ்வாறு அவர் கூறினார்.

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ‘ராக்கெட்ரி’ என்ற படத்தை மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். அதில் ஜெகனும் நடிக்கிறார். இதுபற்றி கேட்டதற்கு, ‘‘அறிவியல் களம் சார்ந்த சுவாரஸ்யமான படம். இப்போதான் படப்பிடிப்புக்காக பல்கேரியா சென்று திரும்பினோம். படத்தில் எனக்கு ராக்கெட் சயின்டிஸ்ட் கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் மாதவன். 

தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் உருவாகும் படத்தில் நடிப்பது வித்தியாச அனுபவம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in