சுந்தரி நீயும் சுந்தரன் நானும்!

வினோத்பாபு - தேஜஸ்வினி
வினோத்பாபு - தேஜஸ்வினி
Updated on
1 min read

ஆயுத எழுத்து தொடரை அடுத்து, விஜய் டிவியில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற மதிய நேர புதிய நெடுந்தொடர் வரும் வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழரசி கனிவான இதயம் கொண்ட நடுத்தர குடும்பப் பெண். பணம் இல்லாவிட்டாலும், நல்ல மனம் கொண்ட குடும்பம். மற்றொரு பக்கம் வேல்முருகன், பணக்கார வீட்டு பையன். பணத்தின் அருமை தெரியாதவர். இவர்கள் இருவரும் ரத்த சொந்தம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள். சில பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் இருவருக்கும் தெரியாது. அவர்களது முதல் சந்திப்பே கசப்பாகிறது. இருவருக்கும் காதல் மலருமா?  அது வழியே இரு குடும்பங்கள் இணையுமா? என்று கதை நகர்கிறது. வேல்முருகனாக வினோத்பாபு நடிக்கிறார். இவர் ‘கலக்கப்போவது யாரு சீசன் 8’ இறுதி போட்டியாளர். தமிழரசியாக தேஜஸ்வினி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் லதா நடிக்கிறார். அப்துல் கபீஸ்  இயக்குகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in