

'கொலையுதிர் காலம்' படத்தைச் சுற்றி நிலவி வந்த பிரச்சினைகள் அனைத்துக்குமே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால், ஜுலை 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார். எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் தலைப்புக்கு பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் முதலில் திட்டப்பட்டி ஜூன் 14-ம் தேதி வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரு மாதக் காலத்துக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜுலை 26-ம் தேதி 'கொலையுதிர் காலம்' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனான ‘காமோஷி’ வெளியாகி போதிய வரவேற்பைப் பெறவில்லை.