தமன்னாவின் 'பெட்ரோமாக்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமன்னாவின் 'பெட்ரோமாக்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பெட்ரோமாக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அதே கண்கள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது தமன்னா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் ரோஹின் வெங்கடேசன். இந்தப் படம் தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வரவேற்பைப் பெற்ற 'ஆனந்தோ பிரம்மா' படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் டாப்ஸி கதாபாத்திரத்தில் தான் தமன்னா நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.  படத்துக்கு 'பெட்ரோமாக்ஸ்' எனத் தலைப்பிட்டுள்ளனர். இதில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் தமன்னாவுடன் நடித்து வருகிறார்கள்.

டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் பால் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். ஜிப்ரான் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in