எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: படப்பிடிப்புகள் நாளை ரத்து

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: படப்பிடிப்புகள் நாளை ரத்து
Updated on
1 min read

எம்.எஸ்.விஸ்வநாதனிடன் மறைவை முன்னிட்டு நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்திருக்கிறது

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பெப்சி தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழ்த் திரையுலகில் அழிக்கமுடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன், திரையுலகில் புராண வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு பாணி வகுத்து மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனிடமும், இயற்கையிடமும் இசையிடமும் கலந்து விட்டார்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நாளை படப்பிடிப்புகளை ரத்து செய்யப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in