திரை விமர்சனம் - கொரில்லா

திரை விமர்சனம் - கொரில்லா
Updated on
2 min read

அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுத்துக் கொடுப்பதுபோல நடித்து பயணிகளிடம் பணம் பறிப்பது, மாலையில் போலி
டாக்டர் அவதாரம் என நடமாடும் மோசடி இளைஞர் ஜீவா. சென்னையில் விவேக் பிரசன்னா, சதீஷ்ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். ஊரில் விவசாயம் பொய்த்ததால் சென்னைக்கு வரும் மதன்குமார், இந்த வீட்டின் கீழ் போர்ஷனில் குடியேறுகிறார். 4 பேரும் நண்பர்கள் ஆகின்றனர். தங்கள் பணத் தேவைக்காகநால்வரும் இணைந்து ஒரு வங்கியில் கொள்ளையடிக்கின்றனர். 

அவர்களை போலீஸ் சுற்றிவளைக்கிறது. வங்கி ஊழியர்களையும், சில வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக நால்வரும் பிடித்து வைத்துக்கொள்கின்றனர். பிணைக் கைதிகளை விடுவிக்க அவர்கள் விடுத்த கோரிக்கை என்ன? காவல் துறை யும், அரசும் அதை ஏற்றுக்கொண் டதா? அவர்கள் தப்பினார்களா? இதுதான் மீதிக் கதை.

நாயகனும் நண்பர்களும் இணைந்து திருடுவதற்கான கார ணத்தை வலிமையாக உருவாக் கிய இயக்குநர் டான் ஸேன்டி, எந்த இடத்திலும் தேங்கிவிடாமல் திரைக்கதையை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக எடுத்துச் சென் றிருக்கிறார். லாஜிக்கையும் ஓரளவு கவனத்தில் கொண்டிருக்கிறார். பிணைக் கைதிகளை விடு விக்க அவர்கள் வைக்கும் திடீர் கோரிக்கை இன்றைய சூழ்நிலை யுடன் பொருந்திப்போய் நன்றா கவே எடுபடுகிறது.

சில்லறைத் திருட்டுகள், போலி டாக்டர் என ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் இளைஞனாக ஜீவாவின் நடவடிக்கைகள் சிரிப்பை வர வழைக்கின்றன. சில காட்சிகளில் அவரது செயல்பாடுகள் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிறது. கதாநாயகி ஷாலினி பாண்டேவின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.

நகைச்சுவைக் கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் சதீஷ், விவேக் பிரசன்னா இருவரும் டைமிங் நகைச்சுவையில் சிக்ஸர்களை விளாசுகின்றனர். யோகிபாபு, ராதாரவி வந்த பிறகு நகைச்சுவை பஞ்ச்கள் தெறிக்கின்றன. ‘மொட்டை’ ராஜேந்திரனை அள 
வாக பயன்படுத்தியிருப்பது புத்தி சாலித்தனம்.

ஜீவாவின் செல்லப் பிராணியாக ஒரு சிம்பன்ஸி. அது எப்படி அவருடன் சேர்ந்தது என்பதை கார்ட்டூன் அனிமேஷனாக காட்டு 
கிறார்கள். சிம்பன்ஸியை திறமை யாக திரைக்கதையில் நுழைத்த வர்கள், அதை வைத்து உருப்படி யான காட்சிகளை உருவாக்க வில்லை. வங்கியில் எச்சரிக்கை அலாரத்தை அழுத்துவது, பிணைத் தொகை அடங்கிய பணப்பையை எடுத்து வருவது ஆகிய காட்சிகளில் மட்டும் சிம்பன்ஸி கவனிக்க வைக்கிறது.

முழு நீள நகைச்சுவைப் படத் தில் விவசாயிகளின் முக்கியப் பிரச்சினையைத் திறமையாக புகுத்தியது, சில காட்சிகள் கருத் 
துப் பிரச்சாரமாக இருந்தாலும் திடீர் கோரிக்கை மூலம் அதை அழுத்தமாகக் கையாண்டது ஆகிய வற்றுக்காக இயக்குநரைப் பாராட்ட லாம். அதேநேரம், கதாநாயகியின் உயரத்தையும், காமெடியனின் முகத்தோற்றத்தையும் கிண்டல் செய்திருப்பது தவிர்த்திருக்க வேண்டிய மலினச் சித்தரிப்பே தவிர, அவை நகைச்சுவை அல்ல.

வெவ்வேறு சூழ்நிலைகளில் அலைபாயும் இளைஞர்கள், சுயநலம் மறந்து சமூகக் காதல் கொண்டவர்களாக மாறுவதை நகைச்சுவைக் களத்தில் பொருத்தித் தந்த விதத்தில் இந்த கொரில்லா ஓரளவு ‘சிரி’ல்லா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in