

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய காந்த் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு கேட்போம் என்றார் நடிகர் விஷால்.
திருச்சி தேவர் ஹாலில் நேற்று நடைபெற்ற நாடக நடிகர் களுடனான ஆலோசனைக் கூட் டத்தில் அவர் பேசியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அளிக்கும் செலவு கணக்கு புரியவில்லை. பொது வாக, இணையதளம் தொடங்கு வதற்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால், நடிகர் சங்க இணையதளத்துக்கு ரூ.9 லட்சம் செலவானதாகவும், நடிகர் சங்கத்தினர் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரூ.11 லட்சத் துக்கும் அதிகமாக செலவான தாகவும் கணக்கு காட்டுகின் றனர். அதேபோல, நாடக நடிகர்க ளுக்காக நடிகர் ஜே.கே.ரித்தீஷ் கொடுத்த ரூ.10 லட்சம் எங்கே போனது என்று தெரியவில்லை.
நடிகர் ராதாரவி, சின்னத் திரை நடிகர்களை சந்தித்த போது, எங்களைப் பற்றி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி யுள்ளார். அதேபோல, நடிகர் கமல்ஹாசன் குறித்தும் தவறாக பேசியுள்ளார். அதன் ஆதாரம் எங்களிடம் உள்ளது.
நடிகர் சங்க உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 100 பேருக்குக்கூட நடிகர் சங்க நிர்வாகத்தால் பயன் கிடைக்கவில்லை. நடிகர் சங்க விவகாரத்தில் நான் மட்டுமின்றி, தற்போது பிறரும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணிக்கு வெற்றி உறுதி என்றார் விஷால்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் விஷால் கூறும் போது, “தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகு, மூத்த சினிமா கலைஞர்கள் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள் ளிட்டோரை சந்தித்து ஆதரவு கேட்போம். எங்கள் பின்னணியில் எந்த அரசியல் சாயமும் இல்லை” என்றார்.
நாசர், பொன்வண்ணன், கரு ணாஸ், சரவணன் ஆகிய நடிகர் களும் உடன் வந்திருந்தனர்.
முன்னதாக, தனியார் ஹோட்ட லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘அஞ்சுக்கு ஒண்ணு’ என்ற திரைப்படத்தின் பாடல் சிடியை விஷால் வெளியிட்டார்.