

லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சண்டக்கோழி 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'சண்டக்கோழி'. யுவன் இசையமைத்த இப்படத்தை ஜி.கே நிறுவனம் தயாரித்தது. 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தற்போது மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. விஷால் நாயகனாக நடித்து தயாரிக்க இருக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், கெளரவ வேடத்தில் மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும், நாயகியாக நடிக்க முக்கிய நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த வாரத்தில் நாயகி யார் என்பது தெரிந்துவிடும் என்கிறது படக்குழு.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 9ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.