

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி மலேசியாவில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'அட்டகத்தி', 'மெட்ராஸ்' ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித், ரஜினி நடிப்பில் மூன்றாவது படம் இயக்குகிறார். இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். சந்தோஷ்நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு 'மெட்ராஸ்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த மலேசிய அரசாங்கத்திடம் அனுமதிக்கோரி படக்குழு மனு அளித்திருப்பதாகவும், அங்கிருந்து வரும் பதிலைப் பொறுத்து படப்பிடிப்பு தேதி இறுதி செய்யப்படும் என படக்குழு தரப்பில் தெரிவித்தார்கள்.