

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'அப்பாடக்கர்' படத்தின் தலைப்பை தற்போது 'சகலகலா வல்லவன்' என்று மாற்றி இருக்கிறார்கள்.
சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'அப்பாடக்கர்'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் டீஸர் வெளியாகி இருப்பதைத் தொடர்ந்து, விரைவில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்நிலையில், தற்போது 'அப்பாடக்கர்' என்ற தலைப்பை 'சகலகலா வல்லவன்' என்று படக்குழு மாற்றி இருக்கிறது. வரிச்சலுகையை முன்வைத்து படக்குழு பெயர் மாற்றம் செய்திருக்கிறது என்கிறார்கள்.