

ராம் இயக்கி வரும் 'தரமணி' படத்தில் கெளரவ வேடத்தில் அஞ்சலி நடித்திருக்கிறார்.
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்க, ராம் இயக்கி வரும் படம் 'தரமணி'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சதீஷ்குமார் வெளியிட இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தரமணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முக்கியமான, ஆனால் சிறிய கதாபாத்திரத்தில் அஞ்சலி கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஏற்கனவே 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் 2007ம் ஆண்டு தமிழ் திரையுலகுக்கு அஞ்சலியை அறிமுகப்படுத்தியவர் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.