

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் சர்வதேச அளவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியள்ளது.
குறைந்த நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.
"வேறெந்த திரைப்படமும் இந்த சாதனையை படைத்ததில்லை. வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட ரூ.140 கோடியை வசூலித்துள்ளது" என வர்த்தக ஆய்வாளர் த்ரிநாத் கூறியுள்ளார்.
இதே நிலை தொடர்ந்தால் இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் பாகுபலி பெறும் என த்ரிநாத் கூறினார்.
"திங்கள்கிழமை படத்தின் வசூல் எவ்வளவு எனப் பார்க்க வேண்டும். பெரிய வீழ்ச்சி இல்லையென்றால் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள சல்மானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் வரை பாகுபலியின் வசூல் தொடர்ந்து வரும் நாட்களில் சிறப்பாக இருக்கும்" என்றார் அவர்.