

'ஆக்கோ' படத்திற்காக அனிருத், ஏமி ஜாக்சன் பங்கேற்கும் பாடல் ஒன்றை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சென்னை முழுவதும் அனிருத்தை முன்னிலைப்படுத்தி போஸ்டர் ஒட்டப்பட்ட திரைப்படம் 'ஆக்கோ'. அர்ஜூனன், துலிகா குப்தா என முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை மட்டுமே அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் 'எனக்கென யாரும் இல்லையே' என்ற பாடல் மட்டுமே இணையத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.
அனிருத் பாடியிருக்கும் இப்பாடலை, அவரையே நடனம் ஆட வைத்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. அமெரிக்காவில் படமாக்கப்பட இருக்கும் இப்பாடலில் அனிருத்துடன், ஏமி ஜாக்சனும் நடிக்க இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் இதற்காக அமெரிக்கா செல்லவிருக்கிறது படக்குழு.