38 தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன்: இயக்குநர் ஆதிக் நேர்காணல்

38 தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன்: இயக்குநர் ஆதிக் நேர்காணல்
Updated on
2 min read

டீஸர், ட்ரெய்லர், பிட்டு பாடல்கள் என இளைஞர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் இருந்த புதுமுக இயக்குநர் ஆதிக்கிடம் பேசினோம்.

உங்கள் படத்துக்கு ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்று தலைப்பு வைத்தது ஏன்?

என் வாழ்க்கையிலும் என் நண்பர்கள் வாழ்க்கையிலும் நடந்த சில சுவையான சம்பவங்களைத் தொகுத்து எழுதியதுதான் இந்தக் கதை. இதற்கு என்ன தலைப்பு வைக் கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். ஒரு பொண்ணு இல்லனா இன்னொரு பொண்ணு, அந்தப் பொண்ணும் இல்லனா வேறொரு பொண்ணு என்பதுதானே படத்தின் கதை. அப்புறம் ஏன் ‘த்ரிஷா இல்லனா நயன் தாரா’ என்று வைக்கக் கூடாது என தோன்றி யது. அந்த தலைப்பை நான் யோசித்தபோது, இளைஞர்களின் கனவுக் கன்னிகளாக த்ரிஷா மற்றும் நயன்தாரா இருந்தார்கள்.

பசங்க, பொண்ணுங்க என்று இரண்டு தரப்புமே சந்தோஷப்படக் கூடிய படமாக இது இருக்கும். இப்படத்தில் உள்ள க்ளைமாக்ஸ் போன்று தமிழ்ப் பட வரலாற்றில் இதுவரை வந்ததே இல்லை என்று நான் தைரியமாகக் கூறுவேன்.

நீங்கள் யாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி னீர்கள்?

பெரிய இயக்குநர்கள் யாரிடமும் நான் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. கேரளா வில் உள்ள ஒரு இயக்குநரிடம் சில நாட்கள் பணியாற்றிவிட்டு, சென்னை வந்து ஜி.வி.பிரகா ஷிடம் கதை சொன்னேன். அவர் சம்மதித்ததும் இப்படத்தை தொடங்கிவிட்டோம்.

உங்கள் அப்பா திரையுலகில் நீண்ட வருடங் களாக இயக்குநராக வேண்டும் என்று போராடி வருகிறாராமே?

என் அப்பா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதால் தான் நான் இயக்குநராகி விட்டேன் என நினைக்கிறேன். 10-ம் வகுப்பு வரை என் அம்மா என்னிடம், என் அப்பா தொழில் செய்வதாகச் சொல்லித்தான் வளர்த்தார். நான் பிளஸ் 1 படிக்கும்போதுதான் என் அப்பா ஒரு உதவி இயக்குநர் என்று எனக்குத் தெரியும். அப்போதே நான் சினிமாவில் ஜெயிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.

நீங்கள் இயக்குநரானபோது உங்கள் அப்பா கூறிய அறிவுரை என்ன?

நானும் என் அப்பாவும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டோம். கடந்த 3 வருடங்களா கத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு அவரை பிடிக்காது, அவருக்கு என்னைப் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் அடிப்பார், திட்டு வார். சினிமாதான் எங்களை இணைத்தது.

ஒரு கட்டத்தில் நானும், அப்பாவும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்தோம். அவரை ஒரு இடத்தில் இறங்கிவிட்டு நான் ஒருவரிடம் கதை சொல்ல சென்று விடுவேன். அவர் வேறு ஒருவரிடம் கதை சொல்ல சென்றுவிடுவார். மாலையில் இருவரும் ஒன்றாக வீட்டுக்கு போவோம். சினிமாவை பற்றி எனக்கு நிறைய அறிவு கிடையாது, அவர்தான் சினிமாவைப் பற்றி நிறைய பேசுவார்.

நான் படம் பண்ணுவது முடிவானதும் என் அப்பாவிடம், நான் ஏதாவது தவறு செய்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள் என்று கூறினேன். படம் முடிவாகி அலுவலகம் திறந்த பிறகு அவர் படத்தின் கதையைக் கேட்டார். நான் படத்தின் ஸ்கிரிப்டை அவரிடம் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்த அவர், “இளைஞர்களை கவர்வது போல ஒரு வித்தியாசமான கதையை எழுதியிருக்க. நல்லா இருக்கு. ஆல் தி பெஸ்ட்” என்றார்.

இப்படத்தின் முத்தக் காட்சி 36 டேக்குகளை வாங்கியதாகச் சொல்கிறார்களே?

36 டேக்குகளை வாங்கியது உண்மை தான். ஆனால் நான் ஏதோ விளம்பரத்துக்காக அப்படி சொன்னதாக ஜி.வி.பிரகாஷ் சார் மழுப்பு கிறார். பார்ப்பவர்கள் எல்லாம் ‘என்னங்க 36 முறை முத்தம் கொடுத்தீங்களாமே’ என்று கேட் டால் ஜி.வி சார் என்ன பண்ணுவார் பாவம். இதற்கு மேல் இதுபற்றி என்னிடம் யாராவது கேட்டால் 36 டேக் போன மொத்த வீடியோ வையும் யூ-டியூப்பில் பதிவேற்றி விடுவேன்.

அப்பாவியைப் போல் இருக்கும் ஜி.வி.பிரகாஷை எப்படி இந்த படத்தில் நாயகனாக நடிக்க வைத்தீர்கள்?

அப்பாவி போன்ற ஒருவர்தான் இந்தக் கதைக்கு தேவை. கதைப்படி ஹீரோ அழுதால், பார்ப்பவர்கள் சிரிக்க வேண்டும். அதை பெரிய ஹீரோ பண்ணினால் எடுபடுமா என்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான் ஜி.வி.பிரகாஷை தேர்ந்தெடுத்தேன்.

முதல் கதையை படமாக்க எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள்?

இந்த கதையை 38 தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருப்பேன். அவர்கள் அனைவருமே படத்தின் டீஸர், ட்ரெய்லர் ஆகியவற்றை பார்த்துவிட்டு பேசும் போது சந்தோஷமாக இருக்கிறது. இந்தக் கதையை படமாக பண்ணலாம் என்று முதலில் நம்பியது தாணு சார் தான். அவர் நம்பிக்கை கொடுத்த பிறகுதான் எனக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. தாணு சார் தயாரிப்பில் ஜி.வி சாரின் முதல் படமாக வந்திருக்க வேண்டிய படம் இது. சில சூழ்நிலைகளால் அந்த நேரத்தில் நடக்காமல் போய்விட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in