

உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப் பட்ட மகான் அப்துல் கலாம் என்று நடிகர் சிவகுமார் புகழாஞ்சலி
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "உண்மை, நேர்மை, திறமை, கடும் உழைப்பு , நாட்டுப்பற்று இருந்தால் ஒருவன் எந்த குக்கிராமத்தில் பிறந்தாலும் எவ்வளவு ஏழை யாகப் பிறந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டில் உயர்ந்த பதவியைப் பெற முடியும். உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
பதவியில் இருந்த போதும் பதவியில் இல்லாத போதும் உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப் பட்ட மகான் ! இளைஞர்களின் உந்து சக்தியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த அற்புத மனிதர்!" என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.