

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'சகலகலா வல்லவன்' திரைப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சகலகலா வல்லவன்'. தமன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிந்தவுடன் சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினார்கள். 'யூ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து படக்குழு ஜூலை 31ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறது.
இப்படத்தின் சென்னை உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.