ஈராஸ் நிறுவனப் பொறுப்பை ராஜினாமா செய்த சௌந்தர்யா

ஈராஸ் நிறுவனப் பொறுப்பை ராஜினாமா செய்த சௌந்தர்யா
Updated on
1 min read

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை சௌந்தர்யா ரஜினிகாந்த் ராஜினாமா செய்திருக்கிறார். இதை சௌந்தர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'கோச்சடையான்' இசை வெளியீட்டு விழாவில், ரஜினி சௌந்தர்யா குழந்தை பெற்றுக்கொண்டு குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதும், அதே ஆலோசனையை மகளுக்கு வழங்கினாராம். "குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியம். குழந்தை நன்றாக வளர்ந்தவுடன், வேலை உள்ளிட்ட விஷயங்களைத் தீர்மானித்துக் கொள்" என்று செளந்தர்யாவுக்கு ஆலோசனை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சௌந்தர்யா ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

குழந்தையை கவனித்துக்கொள்வதற்காகவும், அடுத்த பட வேலைகள் குறித்து தீவிரமாக இயங்குவதற்காகவும் வேலையை ராஜினாமா செய்ததாக சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in