அறுந்த ரீலு 10: சந்தானத்தின் வெளிவராத இந்தி அவதாரம்

அறுந்த ரீலு 10: சந்தானத்தின் வெளிவராத இந்தி அவதாரம்

Published on

10 ஆண்டுகளுக்கு முன்னர் 'சின்னு மன்னு' என்ற இந்தி படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார் சந்தானம்.

முழுக்க பாங்காக்கில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்துவிட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, தயாரிப்பாளர் மரணமடைந்துவிட்டார். தயாரிப்பாளர் மரணத்தால் அப்படம் அப்படியே கைவிடப்பட்டது. அப்படத்தில் நாயகனுடன் தென்னிந்தியராக, காமெடி வேடத்தில் நடித்தார் சந்தானம்.

அப்படத்தில் 10 விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் சந்தானம். தென்னிந்தியர் ஒருவர், வட இந்தியாவில் போய் குடியேறும் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு வீட்டுக்குள் இருக்கும் பொருளை யாருக்கும் தெரியாமல் எடுக்கும் கதாபாத்திரத்தில், விதவிதமான கெட்டப்புகளில் தோன்றியுள்ளார். . 'அபூர்வ சகோதர்கள்' அப்பு கமல் உள்ளிட்ட பல்வேறு கெட்டப்புகள் இதில் அடங்கும்.

சந்தானம் நடித்த ஒரே இந்திப் படம் அது மட்டுமே. அதற்குப் பிறகு வந்த எந்த ஒரு இந்திப் பட வாய்ப்பையும் சந்தானம் ஏற்கவில்லை. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்திருக்கிறார் சந்தானம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in