ஜூலை 3-ல் வெளியாகிறதா பூலோகம்?

ஜூலை 3-ல் வெளியாகிறதா பூலோகம்?
Updated on
1 min read

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'பூலோகம்' திரைப்படம் ஜூலை 3ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்.

கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்திருக்கும் படம் 'பூலோகம்'. ஆஸ்கர் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தைத் தயாரித்து வெளியிட்டதால் இப்படத்தை வெளியிடாமல் இருந்தது ஆஸ்கர் நிறுவனம். 'ஐ' வெளியானதைத் தொடர்ந்து வெளியாகும் என்று அறிவித்திருந்தாலும் 'பூலோகம்' வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது 'ரோமியோ ஜூலியட்' திரைப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் 'பூலோகம்' படத்தை வெளியிடலாம் என்று ஆஸ்கர் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

படம் முடிவடைந்து நீண்ட நாட்கள் கழித்து, 'பூலோகம்' வெளியிடவதற்கான வேலைகள் தொடங்கி இருப்பதால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in