செல்வராகவன் - சிம்புவின் கான்- முதல் பார்வை போஸ்டர்

செல்வராகவன் - சிம்புவின் கான்- முதல் பார்வை போஸ்டர்
Updated on
1 min read

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் 'கான்' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வருட இடைவெளியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நடிகர் சிம்பு, இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து நடிக்கும் படம் 'கான்'. காடும் காடு சார்ந்த பகுதியும் என போஸ்டரில் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர யுவன் சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவுடன் செல்வராகவன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் தாப்ஸி மற்றும் கேத்ரீன் தெரஸா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தயாரிக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in