அப்பாவுக்கே என் ஆதரவு: வரலெட்சுமி சரத்குமார் அறிவிப்பு

அப்பாவுக்கே என் ஆதரவு: வரலெட்சுமி சரத்குமார் அறிவிப்பு
Updated on
1 min read

எப்போதுமே அப்பாவுக்கே எனது ஆதரவு என்று வரலெட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் நேரடி போட்டி நிகழ்ந்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி புகார்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சரத்குமாருக்கு எதிராக அவருடைய மகள் வரலெட்சுமி தான் விஷாலைத் தூண்டி வருகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனை மறுத்த வரலெட்சுமி, அத்தகைய செய்திகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து வரலெட்சுமி சரத்குமார், "உண்மை ஏதுமில்லாத முட்டாள்தனமான செய்திகளைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டேன். நம்பகத்தன்மையான செய்திகள் இல்லை என்றால், எழுதுவதற்கு உரிமை இல்லை.

ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் எப்போதுமே என் அப்பா சரத்குமாருக்குதான் எனது ஆதரவு தருவேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in