ஒரே நாளில் 2 படங்களை வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம்

ஒரே நாளில் 2 படங்களை வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம்
Updated on
1 min read

'நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்' மற்றும் 'குற்றம் கடிதல்' ஆகிய இரண்டு படங்களையும் ஜூன் 19ம் தேதி வெளியிட இருக்கிறது கே.எஸ்.கே நிறுவனம்

ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்' திரைப்படம். நான்கு போலிஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களைப் பற்றிய நகைச்சுவை கதையாகும்.

பிரம்மா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'குற்றம் கடிதல்'. பல்வேறு விருதுகளை குவித்திருக்கும் இப்படம், தேசிய விருதும் வென்றிருக்கிறது. 'குற்றம் கடிதல்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களையும் ஜூன் 19ம் தேதி வெளியிட ஜே.எஸ்.கே நிறுவனம் வெளியிட முடிவு செய்திருக்கிறது.

இந்த முடிவு குறித்து, "நல்ல திரைப்படங்களை வரவேற்று ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' மற்றும் ‘குற்றம் கடிதல்’ ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார் ஜே.எஸ்.கே சதீஷ்குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in