போலி ஃபேஸ்புக் கணக்கு: இயக்குநர் ஹரி புகார்

போலி ஃபேஸ்புக் கணக்கு: இயக்குநர் ஹரி புகார்
Updated on
1 min read

தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி ஃபேஸ்புக் கணக்கு தொடர்பாக இயக்குநர் ஹரி கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

'தமிழ்', 'சாமி', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம் 2' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹரி. தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குநராக வலம் வருகிறார். தற்போது விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'பூஜை' படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் ஹரி, கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை வியாழக்கிழமை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இயக்குநர் ஹரி கூறியிருப்பது, "நான் பல ஆண்டுகளாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை எனது பெயரில் நான் ஃபேஸ்புக் கணக்கு எதுவும் தொடங்கவில்லை. திரைப்படத் துறையில் நான் பிரபலமாக உள்ள காரணத்தினால், இயக்குநர் ஹரி என்ற எனது பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் எனது விவரங்களை தவறாக சித்திரித்துள்ளனர். அதை சிலர் தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆகவே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் கணக்கை தடை செய்து, இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in