

ஃபேஸ்புக்கில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களையும், விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன் என்று சிவகுமார் கூறியுள்ளார்.
நடிகர் சிவகுமார் சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பக்கத்தில் இனி பதிவிடப்போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தீரன் சின்னமலை குறித்து சிவகுமார் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருந்தார். அந்த பதிவால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். அதனால் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக ஃபேஸ்புக்கில் இருந்து சிவகுமார் விலகுவதாக சொல்லப்பட்டது.
''70 வயது தாண்டி , முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன். இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை - சாதி வெறியை - வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .
தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன். எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்'' என்று சிவகுமார் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏற்கெனவே கூறி இருந்தார்
இதைத் தொடர்ந்து பல ரசிகர்கள் சிவகுமார் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
ஃபேஸ்புக்கில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன் என்று சிவகுமார் கூறியுள்ளார்.
இனி, தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவுகளை எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.