

U1 என்ற இசை நிறுவனம் ஆரம்பித்து, அதன் மூலமாக இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்க யுவன் சங்கர் ராஜா முடிவு செய்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா இசையில் 'மாஸ்', 'யட்சன்', 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், "விரைவில் தனியாக ஒரு ஆடியோ நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். அதை உண்மையாக்கி தற்போது U1 என்ற பெயரில் ஆடியோ நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் யுவன். இதனை தன்னுடைய புதிய ட்விட்டர் பக்கத்தில் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், " U1 நிறுவனம் தனி ஆல்பங்களைத் தயாரிக்கும். நிச்சயம் அது இளம் கலைஞர்களுக்கான சிறந்த அறிமுகத் தளமாக இருக்கும் என நம்புகிறேன் "என்று தனது ஆடியோ நிறுவனம் குறித்து தெரிவித்திருக்கிறார் யுவன்.