உடல் உறுப்புகளைத் தானம் செய்த த்ரிஷா

உடல் உறுப்புகளைத் தானம் செய்த த்ரிஷா
Updated on
1 min read

PETA அமைப்பின் விளம்பரத் தூதராக இருக்கும் த்ரிஷா, தற்போது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

தமிழ்,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிஸியாக இருக்கும் வேளையிலும், PETA அமைப்பின் விளம்பர தூதராக இருப்பது, பிறந்த நாளில் உதவுவது, மரக்கன்றுகள் நடுவது என பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

அதுமட்டுமன்றி நாய்களுக்கு அடிபட்டுவிட்டால் உடனே ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டு உதவுவது என மிருகங்களுக்கு தனது ட்விட்டர் தளம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறார்.

தற்போது, தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்திருக்கிறார் த்ரிஷா. இதயம், சிறுநீரகம், நுரையீரல், கணையம், கண்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் தானம் செய்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in