Last Updated : 09 May, 2015 01:04 PM

 

Published : 09 May 2015 01:04 PM
Last Updated : 09 May 2015 01:04 PM

மே 25 இசை; ஜூலை 17 வெளியீடு: மாரி அப்டேட்ஸ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'மாரி' படத்தின் இசை மே 25ம் தேதியும், படத்தை ஜூலை 17ம் தேதியும் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.

'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் மூன்றாவது படம் 'மாரி'. தனுஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும், மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து 'மாரி' திரைப்படத்தைத் தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

'மாரி' படத்தில் டெய்லராக தனுஷ் நடிக்கிறார். நூல் விற்கும் பெண்ணாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முழுக்க முழுக்க சென்னைத் தமிழ் பேசி தனுஷ் நடிக்கிறார். இதில் ஒரு குத்துப்பாடலுக்கு தனுஷும், அனிருத்தும் இணைந்து நடனம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் இசையை மே 25ம் தேதியும், படத்தை ஜூலை 17ம் தேதியும் வெளியிட தீர்மானித்திருப்பதாக தயாரிப்பாளர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தனுஷ் - அனிருத் கூட்டணியில் 'மாரி' இசை உருவாகி இருப்பதால் இப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x