மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்

மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்

Published on

சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'மாஸ்' படத்தின் தலைப்பை 'மாஸ் என்கிற மாசிலாமணி' என்று மாற்றியிருக்கிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'மாஸ்'. நயன்தாரா, ப்ரணீதா, சமுத்திரக்கனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சூர்யாவோடு நடித்திருக்கிறார்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து இருக்கிறார்.

மே 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட 'மாஸ்' தற்போது சென்சார் பணிகள் அனைத்தும் முடிந்ததால் மே 29ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்திலுமே 'மாஸ்' என்ற தலைப்பு மட்டுமே இருந்தது. இன்று வெளியிடப்பட்டு இருக்கும் விளம்பரத்தில் 'மாஸ் என்கிற மாசிலாமணி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டால், வரிச்சலுகைக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும். படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தால், வரிச்சலுகை கிடைக்காது என்ற காரணத்தால் தலைப்பை மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in