

‘இது நம்ம ஆளு’ படம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் சிம்புவுக்கு இடையே இருந்துவந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத் தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘இது நம்ம ஆளு’. முதல் பிரதி அடிப்படையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக் காக பாண்டிராஜ் இப் படத்தை இயக்குகிறார். சிம்பு வின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இப்படம் இன்னும் முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் பாண்டி ராஜ், ‘ஹைக்கூ’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். இப்படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது ‘ஹைக்கூ’ படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் படத்தைத் தொடங்க பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே பாண்டிராஜ் மற்றும் டி.ராஜேந்தர் இருவருக் கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள தாகவும், இதனால் ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு சிக்கல் நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளி யாகின. இது குறித்து படக்குழு வினரிடம் விசாரித்த போது, “உண் மையில் டி.ராஜேந்தருக்கும், பாண்டிராஜுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. தயா ரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு விடம் டி.ராஜேந்தர் பேசியது உண்மை. ஆனால் அவர் பாண்டி ராஜ் மீது புகார் கொடுக்கும் அள வுக்கெல்லாம் செல்லவில்லை. படத்தில் இன்னும் இரண்டு பாடல் கள் பாக்கியுள்ளன. சிம்பு நடித் துள்ள காட்சிகளுக்கு அவர் டப்பிங் பேச வேண்டும். மற்ற பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன” என்றனர்.
இப்பிரச்சினை குறித்து இயக்கு நர் பாண்டிராஜிடம் கேட்ட போது, “எனக்கு தினமும் பணியாற்ற வேண்டும் என்று ஆசை. ‘இது நம்ம ஆளு’ படம் தாமதமாகும் என்று நினைத்து ‘ஹைக்கூ’ படத்தை ஆரம்பித்தேன். எனக்கு ‘இது நம்ம ஆளு’ படத்தின் மீதோ, படக்குழுவினர் மீதோ எந்த வருத்தமும் இல்லை. என் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக ‘இது நம்ம ஆளு’ இருக்கும். இப்படத்துக்கு குறளரசன் இன்னும் 2 பாடல்கள் தரவேண்டும். பாடல்கள் தயாரானவுடன் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம்” என்றார்.
நடிகர் சிம்புவிடம் கேட்ட போது, “படத்துக்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. ‘வாலு’ படம் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே இருப்பதால், அப்படத் தின் வெளியீட்டு தேதி உறுதி யானவுடன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறோம். இன்னும் இரண்டு பாடல்களை மட் டுமே படமாக்க வேண்டியுள்ளது. கடுமையாக உழைத்த ஒரு படத்தை, வெளியாகாமல் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த படத் துக்கு செல்லும் ஆள் நானில்லை. ஒவ்வொரு படமாக திட்டமிட்டு நடித்து வருகிறேன். முதலில் ‘வாலு’, பிறகு ‘இது நம்ம ஆளு’, செல்வராகவன் படம், கெளதம் மேனன் படம் என தொடர்ச்சியாக இந்த ஆண்டு என் ரசிகர்களைச் சந்தோஷப் படுத்துவேன். இது உறுதி” என்றார்.
‘வாலு’ திரைப்படம் ஜூன் 5, 12, 19 ஆகிய 3 தேதிகளில் ஏதாவது ஒன்றில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.