அறுந்த ரீலு 7: லிங்கா அணையும் ரிவர்ஸ் சிந்தனையும்!

அறுந்த ரீலு 7: லிங்கா அணையும் ரிவர்ஸ் சிந்தனையும்!
Updated on
1 min read

ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் வரும் அணைக் காட்சிகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என 'பின்வரிசை'யில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

'லிங்கா' படத்தின் கதையே அணை கட்டுவதை பின்னணியாக கொண்டது. இதனால் பெரிய அணை செட் ஒன்று போட்டு காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், குறுகிய கால தயாரிப்பு என்பதால் அணை செட்டை கொஞ்சம் கட்டிவிட்டு காட்சிகளை எடுத்துவிட்டு, மறுபடியும் கொஞ்சம் கட்டிவிட்டு காட்சிகளை எடுத்தால் படத்தை திட்டமிட்டப்படி முடிக்க முடியாது என்று நினைத்தார்கள்.

அப்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கலை இயக்குநர் சாபுசிரில் ஆலோசனை நடத்தினார்கள். முதலில் அணையை முழுவதுமாக கட்டி முடித்துவிடலாம். முதல் அணைக்கு மேலே உள்ள காட்சிகளை படமாக்கலாம். அதற்கு பிறகு அணை செட்டை கொஞ்சம் கொஞ்சமாக இடித்து இடித்து படமாக்கலாம் என்று திட்டமிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாபுசிரில் முதலில் அணை செட்டை முழுவதுமாக முடித்துவிட்டார். அணை செட்டை உருவாக்கும் நேரத்தில், அரண்மனைக்குள் நடைபெறும் காட்சிகளை காட்சிப்படுத்திக் கொண்டு இருந்தார் ரவிக்குமார்.

நீங்கள் படத்தில் பார்த்த அணை காட்சிகள் யாவுமே பின்வரிசையில் படமாக்கப்பட்டு படத்தின் முன்வரிசைப்படி இணைக்கப்பட்டது.

அதாவது, கட்டப்பட்ட அணையை வைத்து பிந்தையக் காட்சிகளை எடுத்துவிட்டு, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து, கட்டப்படும் நேரத்துக்குரிய காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் இந்த 'ரிவர்ஸ்' சிந்தனையைக் கண்டு சாபு சிரில் சிலிர்த்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in