அறுந்த ரீலு 6 - அசல், அமர்க்களம், அட்டகாசம் தலைப்பு ரகசியங்கள்!

அறுந்த ரீலு 6 - அசல், அமர்க்களம், அட்டகாசம் தலைப்பு ரகசியங்கள்!
Updated on
1 min read

சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'அசல்', 'அட்டகாசம்', 'அமர்க்களம்' ஆகிய படங்களின் தலைப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

இயக்குநர் சரண் எப்போதுமே தனது படங்களுக்கு நண்பர்களுடன் பேச்சுவாக்கில் கிடைத்த தலைப்பை தான் படத்திற்கான தலைப்பாக உபயோகப்படுத்துவார்.

'அட்டகாசம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணைந்து படம் பண்ணலாம் என்று அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறார் இயக்குநர் சரண். அவ்வாறு பேசிக் கொண்டிருக்க்கும் போது "ஒரிஜினல் என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன 'அசல்' தானே" என்று கேட்டிருக்கிறார் அஜித். ஆஹா... 'அசல்' நல்லாயிருக்கே என்று அதனையே அப்படத்துக்கு தலைப்பாக வைத்துவிட்டார் சரண்.

அதே போல 'அட்டகாசம்' என்ற தலைப்பு முடிவாகும் முன்பு, இயக்குநர் சரணின் நண்பர் "நீங்கள் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ரெண்டு அஜித்தாமே.. அட்டகாசமா இருக்குமே" என்று கேட்டிருக்கிறார். 'அட்டகாசம்' நல்லாயிருக்கே என்று அத்தலைப்பை படத்துக்கு வைத்துவிட்டார் சரண்.

'டூயட்' படத்தின் போது இயக்குநர் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் சரண். அப்போது "அஞ்சலி.. அஞ்சலி" பாடல் பதிவு முடிந்தவுடன் அப்பாடலை பாடிக்கொண்டே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியே வந்திருக்கிறார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானிடம் "எப்படி வந்திருக்கிறது பாடல்" என்று கேட்டிருக்கிறார் எஸ்.பி.பி. அதற்கு "அமர்க்களம்" என்று கூறியிருக்கிறார் ரஹ்மான். அத்தலைப்பை தான் இயக்கும் முதல் படத்துக்கு வைக்க நினைத்தார் சரண். ஆனால், பின் நாளில் அஜித், ஷாலினி இணைந்த படத்துக்கு 'அமர்க்களம்' என்று வைத்துவிட்டார் சரண்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in