

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
'கிரீடம்', 'ஜி' மற்றும் 'மங்காத்தா' ஆகிய படங்களில் அஜித்திற்கு நாயகியாக நடித்தவர் த்ரிஷா. அதற்கு பிறகு இருவரும் இணைந்து படம் நடிக்கவில்லை.
தற்போது கெளதம் மேனன் - அஜித் இருவரும் இணைந்து படம் பண்ணி வருகிறார்கள். அனுஷ்கா நாயகியாக நடித்து வந்தாலும், படத்தில் மற்றொரு முக்கியமான பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வந்தார்கள்.
முதலில் ஏமி ஜாக்சன் பெயரை முன்மொழிந்த கெளதம் மேனன், தற்போது அஜித்தோடு ஏற்கனவே நடித்த த்ரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
14ம் தேதி முதல் தொடங்க இருக்கும் படப்பிடிப்பில் அஜித்தோடு த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.