செளந்தர்யாவுக்கு அட்வைஸ் செய்த ரஜினி!

செளந்தர்யாவுக்கு அட்வைஸ் செய்த ரஜினி!
Updated on
1 min read

ரஜினி கொடுத்த ஆலோசனையின் பெயரில், சௌந்தர்யா ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

'கோச்சடையான்' படத்தின் மூலமாக, ஒரு இயக்குநராக தன்னை முன்னிறுத்தியவர் செளந்தர்யா ரஜினிகாந்த். அப்படத்தைத் தொடர்ந்து ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக பொறுப்பேற்றார்.

புதிய படங்களின் உரிமம் வாங்குவது உள்ளிட்ட ஈராஸ் நிறுவனத்தின் அனைத்து முக்கிய நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வந்தார். சமீபத்தில் செளந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த், "குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியம். குழந்தை நன்றாக வளர்ந்தவுடன், வேலை உள்ளிட்ட விஷயங்களைத் தீர்மானித்துக் கொள்" என்று செளந்தர்யாவுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

அப்பாவின் ஆலோசனையைத் தொடர்ந்து, ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை செளந்தர்யா ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

செளந்தர்யாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அப்பதவிக்கு வரும் புதிய தலைவர் யார் என்பது உள்ளிட்ட தகவல்கள் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in