உத்தம வில்லன் படத்துக்கு யு சான்றிதழ்: மே 1-ல் ரிலீஸ்

உத்தம வில்லன் படத்துக்கு யு சான்றிதழ்: மே 1-ல் ரிலீஸ்

Published on

'உத்தம வில்லன்' படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மே 1ம் தேதி வெளியாகிறது

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, இயக்குநர் கே.விஸ்வநாத், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'உத்தம வில்லன்'.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவில்லை. படத்தின் சென்சார் பணிகள் எப்போது, பட வெளியீடு எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், 'உத்தம வில்லன்' படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படம் சென்சார் ஆனதைத் தொடர்ந்து மே 1ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in