Last Updated : 15 May, 2014 01:15 PM

 

Published : 15 May 2014 01:15 PM
Last Updated : 15 May 2014 01:15 PM

நான் மீண்டும் வில்லனாகிறேன்: சரத்குமார் பேட்டி

தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு ஸ்காட் லாந்துக்கு சுற்றுலா போய் வந்திருக்கிறார் சரத்குமார். சுற்றுலா தந்த புத்துணர்ச்சியுடன், தான் இரட்டை வேடமேற்று நடிக்கும் ‘சண்ட மாருதம்’ படத்தின் படப் பிடிப்புக்கு தயா ராகிவிட்டார். ‘காஞ்சனா’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘நிமிர்ந்து நில்’ என்று சமீப காலமாக சிறப்பு தோற்றங்களில் மட்டுமே நடித்து வந்தவர், ‘சண்ட மாருதம்’ படத்தில் நாயகன், வில்லன் என்று இரட்டை வேடங்களில் முழு வேகத்துடன் களம் இறங்குகிறார்.

சென்னையில் பூஜையுடன் தொடங்கிய முதல் நாள் படப்பிடிப் புக்கு இடையே ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.

‘சண்டமாருதம்’ படத்திற்கான கதையை நீங்களே எழுதியிருக் கிறீர்களாமே?

பொதுவாக என்னுடைய படங்களின் கதையில் சில ஐடியாக்களைக் கொடுப் பேன். கதையின் மைய நுணுக்கங்கள் பற்றியெல்லாம் மற்றவர்களுடன் கலந்து ஆலோசிப்பேன். ஆனால் முழுமையாக ஒரு கதையை உரு வாக்கி இருப்பது இதுதான் முதல் முறை. கதையை இயக்குநர் வெங்க டேஷிடம் கூறினேன். அது அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. பிறகு அந்தக் கதையை எழுத்தாளர் ராஜேஷ்குமாரி டம் சேர்த்தோம். அவருக்கு மகிழ்ச்சி.

எழுத்து, திரைக்கதை வேலைகளை முழுமையாக முடித்து தந்தார். இப்போது படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம்.

சமுத்திரகனி, கன்னட நடிகர் அருண் சாகர், ராதிகா, ராதாரவி என்று பெரிய நட்சத்திர கூட்ட ணியை படத்தில் இணைத்திருக் கிறீர்களே?

‘நிமிர்ந்து நில்’ படப்பிடிப்பில் நானும் சமுத்திரகனியும் நல்ல நண்பர்களானோம். அவரிடம் இப்படத் தில் ஒரு வேடத்தில் நடிக்குமாறு கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தில் சரயு, அவ்னி மோடி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒவ்வொருவருக்குமே நடிப்புக்கு முக்கி யத்துவமான கதாபாத்திரமாக அமையும்.

கடந்த சில காலமாக சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே திரைப் படங்களில் நடித்தது ஏன்?

எனக்கிருந்த அரசியல் தொடர்பான வேலைகள்தான் இதற்கு காரணம். அடிக்கடி தொகுதிக்கும் போக வேண்டி இருந்ததால் தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனா லேயே சிறப்புத் தோற்றங்களில் மட்டும் நடித்துவந்தேன். இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்ததால் இப்படத்துக்காக நேரம் ஒதுக்கி நடிக்கிறேன். ‘புலன் விசாரணை’ படத்துக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இந்தப் படத்தில் நான் மீண்டும் வில்லனாகிறேன்.

அதோடு மிஷ்கின் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இதைத்தொடர்ந்து சமுத்திர கனி, கௌதம் வாசுதேவ் மேனன் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இனி தொடர்ந்து வெள்ளித்திரையில் என்னை பார்க்க முடியும்.

ஸ்காட்லாந்து சுற்றுப்பயணம் எப்படி இருந்தது?

தேர்தல் பிரச்சாரத்தை முடித்ததும் சில சொந்த வேலைகளையும் முடித்தேன். பிறகு குடும்பத்தோடு ‘லீட்ஸ்’ புறப்பட்டேன். லண்டனி லிருந்து இரண்டரை மணி நேர பயணம். என் மகள் ரேயன் அங்குதான் எம்.ஏ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் படிக்கிறார். இந்த ஆண்டோடு படிப்பு முடிகிறது. அவர் படிக்கும் பல்கலைக் கழகத்துக்கு போய் வர வேண்டும் என்பது ரொம்ப நாட்கள் திட்டம். அது இப்போதுதான் நிறைவேறியது.

லீட்ஸிலிருந்து 640 கிலோமீட்டர் தூரத்தில் ஸ்காட்லாந்து இருக்கிறது. காரிலேயே பயணம் செய்தோம். அழகான ஊர். குளிர் பிரதேசம். மலை ஏற்றம், டிரக்கிங் என்று புத்துணர்ச்சியை அளிக்கும் பயணமாக இது அமைந்தது. ஸ்காட்லாந்து அதிக நதிகள் உள்ள இடம். மழையை எதிர்பார்க்காமலேயே அங்கே விவசாயத்தை செழிப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அவர்களுடைய பொருளாதார சூழல்தான். அங்குள்ள அனைவரும் பொருளாதார ரீதியாக செழிப்பாக இருக்கிறார்கள். அதே போல் நம் நாடும் மாறவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய் திருக்கிறேன். மக்களை நன்றாக புரிந்து கொண்டேன். சந்தேகமே வேண்டாம். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x