நேபாள படப்பிடிப்பை நினைவுகூர்ந்து துயரத்தை பகிர்ந்த விஜய் மில்டன்

நேபாள படப்பிடிப்பை நினைவுகூர்ந்து துயரத்தை பகிர்ந்த விஜய் மில்டன்
Updated on
1 min read

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் தன்னை உலுக்கியுள்ளது என இயக்குநர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில், விக்ரம், சமந்தா நடிக்கும் திரைப்படம் '10 எண்றதுக்குள்ள'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் நேபாளத்தில் நடைபெற்றது.

இது குறித்து பேசிய விஜய் மில்டன், "சில சமயம் ஒரு இடத்தோடு நாம் பந்தம் இருப்பதாக உணர்வோம். எனக்கு நேபாளத்தோடு அப்படியொரு உணர்வு ஏற்பட்டது. பக்தபூர் என்ற இடத்தில் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடந்தது. அமைதியாக நடந்த படப்பிடிப்பைத் தாண்டி, நேபாள மக்களின் உபசரிப்பும் இன்னும் என் நினைவில் உள்ளது.

நேபாள மொழி தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். இதுவரை நான் பார்த்திராத ஓர் அழகு நேபாளத்தில் இருந்தது. உள்ளூர் மக்கள் மிகவும் நட்புடன், தடங்கலின்றி படப்பிடிப்பு நடத்த உதவிகரமாக இருந்தனர். சிலர் நண்பர்களானார்கள். தொலைபேசி எண்களும் பகிர்ந்து கொண்டோம்.

நிலநடுக்க செய்தி கிடைத்ததிலிருந்து அவர்க்ளைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால் முடியவில்லை. எங்கள் நண்பர்களின் மரணம் எங்களை பாதித்துள்ளது. நேபாள் என்றில்லை, உலகில் எந்த நாட்டுக்குமே இப்படியொரு சோகம் வரக்கூடாது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in