

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்' இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் அஜித். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க முன்வந்தார்.
ஸ்ருதிஹாசன் நாயகி, அனிருத் இசை என படக்குழுவினர் ஒவ்வொருவராக ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
தற்போது, இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்க லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். முதலில் இந்த வேடத்தில் நடிக்க நித்யா மேனனை அணுகினார்கள். அவர் இவ்வேடத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.