

திரு இயக்கும் புதிய படத்தில் ஜெய், டாப்ஸி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கியவர் திரு. தற்போது நான்காவது படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், பேச்சுவார்த்தை உடன்படாததால், ஜெய்க்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார்.
ஜெய்யின் சகோதரராக நடிக்க பிரபுதேவாவிடம் பேசினர். இறுதியில், சமுத்திரக்கனி ஜெய்யின் சகோதரராக நடிக்கிறார். டாப்ஸியின் சகோதரியாக நடிக்க சிம்ரனிடம் பேசினர். ஆனால், சோனியா அகர்வால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஃபிலிம் டிபார்ட்மண்ட் சுஷாந்த் பிரசாத்தும், ரேடியன்ஸ் மீடியா வருண்மணியனும் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்க உள்ளது. இதையடுத்து, சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
திரு சமீபத்தில் விஷால், சுசீந்திரன், பாண்டிராஜ் ஆகிய மூவரிடமும் புதிய படத்தின் கதையைக் கூறி இருக்கிறார். 'நல்ல சமூக கருத்துள்ள கதை' என்று விஷால், திருவைப் பாராட்டினார்.