ஆக.21-ல் நடிகர் சாந்தனு - தொகுப்பாளினி கீர்த்திக்கு திருமணம்

ஆக.21-ல் நடிகர் சாந்தனு - தொகுப்பாளினி கீர்த்திக்கு திருமணம்
Updated on
1 min read

நடிகர் சாந்தனுவுக்கும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எங்கள் மகன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

எங்கள் மகள் சரண்யா சற்று பொறுத்திருந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால்,வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்க உள்ளது.

பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி - விஜயகுமார் மகள் கீர்த்தியே மணப்பெண்.

வரும் ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. 22-ம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது'' என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.

சாந்தனுவும், கீர்த்தியும் காதலித்து வருவதாக ஏற்கெனவே சொல்லப்பட்டது. ஆனால், 'எங்களுக்குள் காதல் இல்லை' என்று கீர்த்தி உறுதியாக மறுத்தார். இந்நிலையில், திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in