

ஒரு காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள வீட்டில் வைத்து மெட்டு அமைத்தால், அந்தப் பாட்டு கண்டிப்பாக ஹிட் என்று மிகவும் நம்பினார்.
'இந்தியன்' பாடல்கள் உருவானபோது...
ஈ.சி.ஆர் சாலையில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 25 மெட்டுக்கள் தயார் செய்தார். அந்தச் சமயம்தான் இயக்குநர் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் 'இந்தியன்' படத்துக்கு பணியாற்றி வந்த நேரம்.
அந்த மெட்டுக்கள் அனைத்தையும் ஒரு ஹார்டு டிஸ்கில் போட்டுக் கொண்டு ஆஸ்திரேலியா பயணமானார். அப்போது விமான நிலையத்தில் தெரியாமல் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்யக் கொடுத்துவிட்டார்.
விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனிங்கில் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்துவிட்டால், அதில் உள்ளவை அனைத்துமே அழிந்துவிடும். வேலை அவசரத்தில் கொடுத்ததால், சுமார் 25 மெட்டுக்கள் அழிந்துவிட்டன.
அப்போது சென்னை திரும்பியவுடன் இயக்குநர் ஷங்கர், பாடல்கள் வேண்டும் என கேட்கவே, ஹார்ட் டிஸ்க்கை போட்டுப் பார்த்தால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெரும் அதிர்ச்சி. ஆனால், அவர் சோகத்தில் எல்லாம் உட்கார்ந்துவிடவில்லை.
உடனடியாக எந்த மாதிரி எல்லாம் மெட்டுக்கள் பண்ணினோம் என்று யோசித்து ஒரே நாளில் 'இந்தியன்' பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
முந்தைய அத்தியாயம்:>அறுந்த ரீலு 2: 'தண்ணில கண்டம்' ரஜினிகாந்த்