சந்தோஷ் நாராயணனை பரிந்துரை செய்த தனுஷ்

சந்தோஷ் நாராயணனை பரிந்துரை செய்த தனுஷ்
Updated on
1 min read

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனை பரிந்துரை செய்திருக்கிறார் தனுஷ்

தனுஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் படம் ஒன்றைத் தொடங்கினார்கள். அப்படத்தை தனுஷ் தயாரிக்க முன்வந்தார்.

தனுஷ், வெற்றிமாறன் இருவருமே 'காக்கா முட்டை', 'விசாரணை' ஆகிய படங்களைக் கூட்டாக தயாரித்திருக்கிறார்கள். இதில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் 'விசாரணை' படத்தின் ட்ரெய்லர் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

'விசாரணை' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் நடித்து வரும் படத்தின் பணிகளைத் துவக்கினார் இயக்குநர் வெற்றிமாறன். இப்படத்துக்கு 'சூதாடி' என்று தற்போதைக்கு தலைப்பிட்டு இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பணிகளை துவங்கி இருப்பதால், இசையமைப்பாளர் யார் என்று வரும் போது சந்தோஷ் நாராயணன் இசையமைத்தால் இக்கதைக்கு நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்திருக்கிறார் தனுஷ்.

சந்தோஷ் நாராயணனிடம் சொன்ன போது, கதையைக் கேட்காமலேயே "கண்டிப்பாக பண்ணலாம் சார்" என்று கூறிவிட்டாராம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in