

இந்திப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா உடன் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற செய்திக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு சூர்யா, ப்ரியாங்கா சோப்ரா நடிக்க நந்திதா என்ற தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அப்படத்தை தன்னுடன் சூர்யா இணைந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராவதாக நந்திதா பேட்டியளித்தார்.
இச்செய்திக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து சூர்யா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடிகர் சூர்யா தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த நந்திதா சிங்கா என்பவர் யார் என்றே தனக்கு தெரியாது என சூர்யா கூறியுள்ளார்.
உண்மைகளை உறுதிப் படுத்திக் கொள்ளாமல் வெளியாகும் இத்தகைய செய்திகள் ஆச்சிரியம் அளிக்கின்றன. இத்தகைய தவறான தகவல்களை பிரசுரிப்பதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.