

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜய் நடித்து தமிழில் வெற்றி பெற்ற 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பார் என்று தெரிகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கடைசிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'தாகூர்' மது தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை, 'டான் சீனு', 'பாடிகார்ட்', 'பலுபு' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி இத்திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பவன் கல்யாண் 'கத்தி' ரீமேக்கில் நடிப்பார் என்று பேசப்பட்டது. 'கப்பார் சிங்' படத்தின் 2-ஆம் பாக வேலைகளில் அவர் ஆழ்ந்திருப்பதால் மற்ற படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது.