கோச்சடையான் ரிலீஸ் மே 23-க்கு தள்ளிவைப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோச்சடையான் ரிலீஸ் மே 23-க்கு தள்ளிவைப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

ரஜினிகாந்த் நடித்து 9-ம் தேதி வெளியாக இருந்த கோச்சடையான் ரிலீஸ் தள்ளிப் போனது. இப்படத்தை மே 23 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய கோச்சடையான் படம் முதலில் அறிவித்தபடி மே 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகாது என்றும், இதற்கு பதிலாக மே 23-ஆம் தேதி வெளியாகும் என கோலிவுட்டின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் ரிலீஸ் இம்மாதம் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக ஈராஸ் நிறுவனம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.

தொழில்நுட்ப காரணங்களால்தான் படத்தை குறித்த தேதியில் வெளியிட முடியாமல் போனதாக, செய்திக் குறிப்பில் ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், கோலிவுட் வட்டாரத்தில் வேறு சில காரணங்கள் உலவுகின்றன.

ஆரம்பம் முதலே கோச்சடையான் படத்தை வெளியிடுவதில் சிக்கல் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன.

இப்படத்தின் பாடல் வெளியீட்டிற்கான தேதியே பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 9-ஆம் தேதி என இறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் வியாபரம் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இதனால் படத்தின் வெளியீடு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோச்சடையான் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, நடிகர் ரஜினி சில நாட்களுக்கு முன்தான் ட்விட்டரில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் ஒத்திவைப்பு எதிரொலியாக, நடிகர் சந்தானம் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படங்கள், மே 9 ரிலீஸ் ஆகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in