

லாரன்ஸின் 7 வயது சிறுவன் பாத்திரத்தின் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2'. டாப்ஸி, நித்யா மேனன், ஸ்ரீமன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை லாரன்ஸ் தயாரித்திருக்கிறார். முதல் பிரதி அடிப்படையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தில் 7 வயது சிறுவன் முதல் 70 வயதானவர் வரையிலான தோற்றங்களில் லாரன்ஸ் நடித்திருக்கிறார். 7 வயது சிறுவன் படத்தின் போஸ்டர் வடிவமைப்பைப் பார்த்த ரஜினிகாந்த் லாரன்ஸுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
"இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நீ நடித்திருக்கிறாய் உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்" என்று தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் 17ம் தேதி இப்படம் வெளியாகிறது. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.