

பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆண் பாவம்' படத்தை மீண்டும் இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
1985ம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆண் பாவம்'. பாண்டியன், ரேவதி, சீதா, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருத்தார்கள். இப்படத்தில் தான் சீதா தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
கிராமத்துப் பின்னணியில் காதல், நகைச்சுவை என அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி அப்படம் அமைந்திருந்தது. தற்போது அப்படத்தை 'ஆண் பாவம் 99%' என்ற பெயரில் மீண்டும் பாண்டியராஜ் இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
பாண்டியராஜன் நடித்த பாத்திரத்தில் அவருடைய மகன் ப்ருத்விராஜன் நடிக்க இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளிவந்த ‘வஜ்ரம்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தை R.சங்கர் தயாரிக்கிறார். கேரளாவில் உள்ள ஒட்டப் பாலத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.