

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான 'வை ராஜா வை' திரைப்படம் மே 1-ல் ரிலீஸ் ஆகிறது.
கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் 'வை ராஜா வை'. தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
சதீஷ், விவேக், டேனியல் பாலாஜி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, லொள்ளு சபா சாமிநாதன், இயக்குநர் வஸந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழ்நாட்டில் 'வை ராஜா வை' திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.
தனுஷ் எழுதிய மூவ் யுவர் பாடி பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். மற்ற நான்கு பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். சென்சாரில் 'வை ராஜா வை' திரைப்படம் யு சான்றிதழ் பெற்றது.
தற்போது '' 'வை ராஜா வை' திரைப்படம் மே 1-ல் ரிலீஸ் ஆகிறது'' என்று ஐஸ்வர்யா தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதே நாளில், கமலின் 'உத்தம வில்லன்’ திரைப்படமும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.