நட்புக்காக பாடிய கௌதம் மேனன்

நட்புக்காக பாடிய கௌதம் மேனன்
Updated on
1 min read

ராதாமோகன் இயக்கும் 'உப்பு கருவாடு' படத்துக்காக கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

'அழகிய தீயே', 'மொழி', 'பொன்னியின் செல்வன்', 'அபியும் நானும்', 'பயணம்', 'கௌரவம்' ஆகிய படங்களை இயக்கியவர் ராதாமோகன். தற்போது கருணாகரன், நந்திதா, எம்.எஸ் பாஸ்கர் , குமரவேல், மயில்சாமி நடிப்பில் உப்பு கருவாடு' படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்துக்கு ஸ்டீவ் வத்ஸ் எனும் புதுமுகம் இசையமைக்கிறார். இயல்பில் நன்றாகப் பாடக் கூடிய கௌதம் மேனனை, படத்தில் பாடுவதற்காக ராதாமோகன் அழைத்தார். கௌதம் மேனனும் அதற்கு சம்மதித்துப் பாடினார்.

மதன் கார்க்கி வரிகளில் புது ஒரு கதவு திறக்குது எனத் தொடங்குகிறது அந்த பாடல்.

ஹீரோயினை மையமாகக் கொண்ட 'உப்பு கருவாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in