

சிவா இயக்கவிருக்கும் படத்தில் அஜித்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்' சிவா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இப்படத்தையும் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்துக்கான பணிகளை தற்போது சிவா துரிதப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதையை கொல்கத்தா பின்னணியில் அமைத்திருக்கிறார். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், காமெடியனாக சந்தானம், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது தனது இரண்டாவது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வரும் அஜித், மே மாதம் முதல் இப்படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.